Wednesday, December 30, 2009

அமில தேரரை ஜேவிபி தலைவர் சிறையில் பார்வையிட்டார்.

மோசடிக் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தம்பர அமில தேரரை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க , மற்றும் மேல் மாகாண சபையின் ஜேவிபி உறுப்பினர் கலாநிதி நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் களுத்துறைச் சிறைச்சாலையில் பார்வையிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட தேரரின் கைது தொடர்பாக அவரது தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் உள்ள சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் இவரை கைது செய்தமை ஓர் அரசியல் பழிவாங்கல் என பெரும்பாலும் பேசப்படுகின்றது. இக்கைதுக்கு எதிராக பிக்குகள் பலர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com