ஜா-எல குருஸ்சவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலாயம் ஒன்றும் கொட்டுக்கொட பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றும் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பலத்த சேதத்தை உருவாக்கியவர்கள் அங்கிருந்த இரு வாகனங்களுக்கும் தீ மூட்டிச்சென்றுள்ளனர். இத்தாக்குதலில் எதிரொலியாகவே பௌத்த விகாரை தாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு காணப்பட்ட புத்தர் சிலையைத் தவிர விகாரையின் பெரும்பகுதி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அதே நேரம் குறிப்பிட்ட விகாரையில் உள்ள பிக்குவின் மீது அதிருப்தி கொண்டோராலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் பொருட்டு விசேட அதிரடிப்படையினர், இராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்தோர் பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்ததப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், இரு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய விரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஜா-எல நெடுஞ்சாலையை வழிமறித்த 500 க்கு மேற்பட்டோர் கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குல் தொடர்பான விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
No comments:
Post a Comment