ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவின் வீடு பிற்பகல் இராணுவப் பொலிஸாரினால் சுற்றிவழைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நடவடிக்கையில் 150 க்கும் மேற்பட்ட இராணுவப் பொலிஸார் இறங்கியதாகவும் அவர்கள் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டினைச் சுற்றி இரவு 11 மணிவரை இருந்ததாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றது.
சரத்பொன்சேகாவின் வீட்டில் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியோர் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இராணுவப் பொலிஸார் தேடுதல் நடத்தும் பொருட்டு அங்கு சென்றதாகவும், வீட்டில் எவரும் இல்லாத காரணத்தால் அவர்கள் திரும்பி வந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் அங்கு தேடுதல் நடாத்தச் சென்ற இராணுவப் பொலிஸாரை வீட்டினுள் நுழைய சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என ஜெனரலுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சரத் பொன்சேகாவினால் பயன்படுத்தப்பட்டுவரும் வாகனம் ஒன்றை எடுத்துச் செல்லவே இராணுவப் பொலிஸார் அங்கு சென்றதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment