எதிர்வரும் 6வது ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை நாட்டைக் காட்டிக்கொடுத்தவர் என பேசப்படுவது தொடர்பாக பத்தறமுல்லை, பலவத்தையிலுள்ள ஜேவிபி தலமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, நாட்டை காட்டிக்கொடுத்தவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே என தெரிவித்துள்ளார்.
நாடு கடும் சிக்கலான நிலைமையிலிருந்தபோது, இந்நாட்டினை அமெரிக்க இராணுவத்திற்கு தளமாக பயன்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டவர்களை விடுத்து, நாட்டினை எந்தகாலகட்டத்திலும் விட்டு ஓடாத ஒரு நபர் மீது அபாண்டமான பழி சுமத்துவது ஏற்புடையதாகாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment