கிழக்குப் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலை இராணுவம் எனும் அமைப்பிற்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது என இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் டாக்டர். அன்வர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இயக்கம் தமிழ் நாடுகோரி போராடப்போவதாக அறிவித்துள்ளதாக Times on line இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த செய்தியில் : அவ்வமைப்பிற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் பின்புலத்தில் உள்ளதாகவும் அவர்களது போராட்டத்திற்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் உதவி புரியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், பாலஸ்தீன அரசாங்கம் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அரசாங்கத்திற்கு போதுமான உதவிகளைச் செய்துள்ளதாகவும், அதனடிப்படையில் தொடர்ந்தும் தனது உதவியை புரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசு அறிந்து வைத்துள்ளதாக பாதுகாப்பு மத்திய நிலையத்திற்கான பேச்சாளர் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவ்வாறான இயக்கம் ஒன்றின் செயற்பாடு உள்ளதை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளமை பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் பல அரசியல் கொலைகளுக்கு குறிப்பிட்ட அமைப்பின் பெயர் உலாவரலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment