Friday, December 4, 2009

புலிகளுக்கும் மஹிந்தவிற்கும் இடையே சிக்கித்தவிக்கும் த.தே.கூ சுவிஸ் செல்கின்றது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தூசிதட்டப்படும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் புலம் பெயர் புலித்தலைமையால் இம்மாதம் 10ம் திகதி சுவிற்சர்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவசர ஒன்று கூடல் ஒன்றில் கலந்து கொள்ளச் செல்லவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. இவ்ஒன்று கூடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பாக தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக பேசப்படவுள்ளதாகவும் அவ்வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தேர்தலில் குதிக்கின்றமை இலங்கை அரசியல் வரலாறு ஒரு முக்கிய திருப்பத்தை எதிர்நோக்கி நிற்கின்றது. அவரது அரசியல் பிவேசம் தென்னிலங்கை அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காட்டிலேயே மழையை பொழியவைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் சரித்திரம் முடிந்தவுடன் சட்டியுடன் சென்றது பிலால் நாற்றம் என புலிகளையும் அதன் புலம் பெயர் தலைமையையும் ஒரே போடில் போட்டு உடைத்துவிட்டு மஹிந்தவின் காலில் மண்டியிட்டுக்கிடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் கிராக்கி ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் இக்கிராக்கி எவ்வளவு நிலையானது என்பதே கேள்வி.

எதிர்வரும் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக நிற்கப்போகும் சரத்பொன்சேகாவிற்கும் மஹிந்த ராஜபக்சவிற்குமான போட்டி எதிர்வுகூறல்களுக்கு அப்பால் சென்றுள்ள நிலையில் இருதரப்பினரும் சிறுபாண்மை இன மக்களின் வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கும் என நம்பும் நிலைக்கும் தள்ளியுள்ளதுடன், தமிழ் மக்களின் வாக்குகளை தமது பக்கம் எடுத்துக்கொள்ள இரு தரப்பினரும் முயற்சிக்கின்ற அதே தருணத்தில் எனக்கு இல்லாவிட்டாலும் உனக்கு கிடைக்கக் கூடாது என்ற நிலையில் அரச தரப்பினர் தமிழ் வேட்பாளர் ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக நிறுத்துவதற்கு பல உந்துதல்களைக் கொடுத்துவருவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் புலிகளின் தலைமையை கைப்பற்றத் துடிக்கும் தரப்புக்களில் ஒரு தரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தமது ஆழுமைக்குள் கொண்டுவருவதற்காகவும் தமிழ் மக்களையும் உலகத்தையும் மீண்டும் ஒருமுறை எமாற்றுவதற்காகவுமே குறிப்பிட்ட ஒன்றுகூடலை எற்பாடு செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் சார்பாக நிதானமானதும் நிரந்தரமானதுமான எந்தவொரு குறிக்கோளையும் கொண்டிராத தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் தேசத்துரோகக் கும்பல் புலம்பெயர் புலிகளின் பணத்திற்காக இம்முறை வாய்திறக்கப்போகின்றனர் என்பது மட்டும்தெளிவு. எதோ ஓரு சக்கியின் தேவையை பூர்த்திசெய்ய தேர்தலில் குதிக்க திட்டமிட்டுள்ள இச்சதிக்கும்பல் ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழுத்தவுள்ளது. முதலாவது புலிகளின் புலம்பெயர் தலைமைக்கு கட்டுப்படுவதாக பாசாங்கு செய்து புலிகள் மக்களிடம் வசூலித்து வைத்துள்ள பணத்தை அபகரிப்பதும், இரண்டாவதாக ஏதோ ஒருவகையில் தமிழ் தமிழ் தேசியம் மற்றும் தமிழீழம் என்கின்ற விசமப்பிரச்சாரங்ளுக்குள் சிக்குண்டு கிடக்கும் தமிழ் மக்களை எமாற்றி வாக்குகளைப் பெற்று தமிழ் மக்கள் தம்மை ஏற்றுக்கொண்டுள்ளதாக மீண்டும் ஒருமுறை உலகை ஏமாற்றுவதே புலிக்கூட்டமைப்பின் திட்டங்களாகும்.

ஜனாதிபதி தேர்தலை எடுத்துக்கொண்டால் அங்கு நிற்கக்கூடிய எந்த வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அந்நிலையில் யாராவது ஒரு தமிழர் தேர்தலில் நிற்கும்போது தமிழ் மக்கள் அவருக்கே வாக்களிப்பர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் அச்சந்தர்பத்தை புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனப்படும் போக்கிரி கூட்டமைப்பு தமிழ் மக்கள் தம்மை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கும் அப்பால் வட்டுக்கோட்டை தீர்மானம், நாடுகடந்த தமிழீழம் போன்ற புலிகளின் நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக மீண்டும் உலகை ஏமாற்ற முனைவர் என்பது வேதனைக்குரியதாகும்.

எது எவ்வாறாயினும் கூட்டமைப்பினுள் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக பலர் கலந்து கொள்ளமாட்டார்கள் தெரியவருவதுடன் நாம் எவரதும் ரிமோர்ட் கொன்றோலர்களில் செயற்படவிரும்பவில்லை ஏவல்கள் எதிர்காலத்தில் செல்லுபடியாகாது என புலம்பெயர் புலிகளுக்கு அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிகாந்தா தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



No comments:

Post a Comment