மக்களிடம் அறவிட்ட பணத்தில் நோர்வேயில் புலிகளின் புதிய சாராயகடை.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் எனும் பெயரால் நோர்வேயில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் புலித் தொழிளார்களால் அறவிடப்பட்டபணம் இன்று தனி நபர்களினால் கையாளப்படுவது தமிழ் மக்கள் முன்நிற்கும் சகித்துக்கொள்ள முடியாத சம்பவமாகும்.
இவ்வாறு நோர்வே வாழ் தமிழ் மக்களிடம் அறவிட்ட பணத்தினைக் கொண்டு நோர்வேயில் சாராயக்கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இச்சாரயக்கடை நோர்வே ஓஸ்லோவில் உள்ள வெத்வேத எனும் சென்ரறில் நிறுவப்பட்டுள்ளது. றங்கப்பா , சூரி என்போரால் நிறுவப்பட்டுள்ள குறிப்பிட்ட மதுபாணக்கடைக்காக தமிழ் மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 6 மில்லியன் குறோணர்கள் முதலிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வன்னியில் இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்கள் எத்தனையோ இன்னல்களை சந்தித்து வருகையில் இவ்வாறன பெருந்தொகை பணம் அங்குள்ள மக்கள் சார்பான அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்பதே புலிகளுக்கு பணம் வழங்கிய மக்களது விருப்பமாக உள்ளது.
0 comments :
Post a Comment