Thursday, December 10, 2009

கிழக்கில் தொடரும் கடும் மழையினால் வீடுகளில் வெள்ளம்!

கிழக்கில் தொடர்ந்து சில காலங்களாக வழமையாகக் கிடைக்கவேண்டிய பருவக்காற்று மழை கிடைக்காமையினால் விவசாய நிலங்கள் குடி நீர் ஆகிய அனைத்தும் பாதிப்புற்றிருந்தது. இதன் நிமிர்த்தம் மக்கள் மழை தேடிப் பல மத நிகழ்வுகளில் ஈடுபட்டுவந்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.)

இதன் பின்னர் கடந்தமாதம் முதல் பெய்யத் தொடங்கிய பருவப்பெயர்ச்சி மழை சுமார் ஒன்றறை மாதங்கள் பெய்ந்து ஒய்திருந்தது மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர். நீர் நிலைகளில் அளவுக்கதிகமான நீர் நிரம்பிக் காணப்பட்டது. இச் சூழலில் கடந்த வாரம் ஆரம்பித்து தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையினால் வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் முழ்க ஆரம்பித்துள்ளன.

கிழக்கின் தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் அப்பகுதி வீதிகள் நீரில் மூழ்கிய நிலையில் தொடரும் மழையினால் தொடர்ந்து பல குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவருகின்றனர்.

இன்னும் ஒருசில நாட்கள் மழை பெய்தாலே பல நூறு குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நாடவேண்டியுள்ளது. தற்போது சில பிரதேசங்கள் நீரில் மூழ்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கிலிருந்து விசேட தொடர்பாளர்.



காரைதீவு முற்றாக முழ்கியுள்ளது.

காரைதீவு வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக காரைதீவில் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடிமனைகள் வீதிகள் பாடசாலைகள் வெள்ளத்தில் இருப்பதையும் பிரதேச சபைத் தவிசாளர் ந.ஜீவராசா தமது குழுவினருடன் மழைக்கு மத்தியில் வடிகான் வேலையிலீடுபடுவதையும் படங்களில் காணலாம்.







(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)

No comments:

Post a Comment