இலங்கைக்கான கனடா உயரிஸ்தானிகர் புறுஸ் லெவி தலைமையிலான தூதரக உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டு அலவல்கள் மற்றும் நீதி அமைச்சின் அனுசரணையில் இடம்பெற்ற இவ்விஜயத்தின்போது அதிகாரிகள் இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடிய பிரஜையையும் சந்தித்து பேசியுள்ளனர்.
குழுவினர் ரம்பைக்குளம் பெண்கள் மகாவித்தியாலயம் , சிறுவர் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பூந்தோட்டம், பம்மைமடு கம்பஸ் விடுதி என்பவற்றுக்கு விஜயம் செய்துள்ளதுடன், புனர்வாழ்விற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கவை சந்தித்து பேசியுள்ளனர்.
No comments:
Post a Comment