இலங்கை கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகள் மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ்
இலங்கை கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகள் மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் கீழ் இதுவரை காலமும் இயங்கிவந்த அம்பாறை ஆயுர்வேத வைத்தியசாலையும் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையும் தற்போது மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற வைபவங்களில் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இந்த வைத்திய சாலைகளின் கட்டுப்பாட்டை உத்தியோகபூர்வமாக மத்திய அரசின் உள்நாட்டு வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவிடம் கையளித்தார்.
மாகாணத்தில் இரண்டு ஆயுர்வேத வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது என மத்திய அரசு எடுத்துள்ள தீர்மானத்தின் பேரிலேயே மருத்துவமனை நிர்வாகத்தை தாம் கையளித்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார்.
மாகாண சபைக்குரிய அதிகாரங்களை மத்திய அரசிடம் ஒப்படைப்பதாக இதனை கருத முடியாது என்றும், தேவை ஏற்பட்டால் அபிவிருத்திக்குப் பின்னர் இந்த மருத்துவமனைகளை மாகாண சபையினால் மீளப்பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment