Wednesday, December 30, 2009

த.தே.கூட்டமைப்பின் பித்தலாட்டம் தொடர்கின்றது. இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நான்கு பிரிவுகளாக பிளவுபட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பித்தலாட்டம் தொடர்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் புலிகளியக்கம் செய்த தவறின் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ஆட்சிப்பீடம் ஏறியதாகவும் புலிகளின் அந்த முடிவை தான் மிகவும் எதிர்த்து புலிகளிடம் வாதிட்டும் பலனை எட்ட முடியாமல் போனதாக தெரிவித்த சம்பந்தன் , எதிர்வரும் தேர்தலில் அதே தவறை தமிழ் மக்கள் செய்து விடக் கூடாது என்ற செய்தியை தெரிவித்ததன் ஊடாக ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என மறைமுகமாகச் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தொகுதியினர் மீண்டும் இன்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நாடாத்தியுள்ளதாக நம்பந்தகுந்த வாட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. இவ்வாறான தொடர்சந்திப்புக்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு தெரியப்படுத்தாதன் மர்மம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

No comments:

Post a Comment