Monday, December 7, 2009

ஒபாமா செல்வாக்கு பெருமளவில் சரிவு- கருத்துக்கணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. ஒபாமாவின் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்து 48 சதவீதத்தினர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர். 50 சதவீதத்திற்கும் குறைவாக ஆதரவு குறைந்திருப்பதால் ஒபாமா ஆதரவு வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சிஎன்என், ஒபினியன் சர்ச் கார்ப்பொரேஷன் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு 53 சதவீதம் பேர் ஆதரவளித்திருந்தனர்.

ஆனால் தற்போது 7 சதவீதம் சரிந்து, 48 சதவீத்தினர் மட்டுமே ஒபாமாவுக்கு வாக்களித்துள்ளனர். 50 சதவீதம் பேர் ஒபாமாவை எதிர்த்து கருத்து கூறியுள்ளனர்.

அதே சமயம், ஒபாமா வெளியிட்ட ஆப்கன் கொள்கைக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேர் இவ் விஷயத்தில் ஒபாமா செய்வது சரி என கூறியுள்ளனர்.

ஒபாமாவுக்கு எதிரான கருத்துக்கள் கூறுபவர்கள் பெரும்பாலும் உயர்கல்வி பெறாத மற்றும் படித்த வெள்ளை இனத்தவர்களே என்று சிஎன்என் கருத்துக்கணிப்பு இயக்குனர் கீட்டிங் ஹாலந்து சுட்டிக்காட்டினார்.

அதாவது ஒபாமாவுக்கு எதிராக இனவெறி உணர்வு அதிகம் இருப்பதை மறைமுகமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஒபாமாவின் செல்வாக்கு சரிவதற்கு மோசமான பொருளாதார சூழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை தான் முக்கிய காரணிகளாக தெரிகின்றன. இவற்றை ஒப்பிடுகையில் வெளிநாட்டுக் கொள்கை விவகாரங்களுக்கு முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது என கீட்டிங் கூறினார்.

ஆப்கனில் இப்போதுள்ள நிலைமைக்கு முன்னாள் அதிபர் புஷ் தான் காரணம் என்று மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்டவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment