2010ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு பாலர்களை சேர்த்துக் கொள்வதற்கான 80 விண்ணப்பங்கள் இப் பாடசாலைக்கு கிடைத்துள்ளது. 09ம் தரம் வரையான வகுப்புக்களை கொண்ட மட்டக்களப்பு மத்திய வலயத்தைச் சேர்ந்த இப் படசாலைக்கு ஏனைய வகுப்புக்களில் சேர்வதற்காகவும் 10 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மொத்தமாக கிடைத்த 90 விண்ணப்பதாரிகளான பெற்றோர்களையும் பாடசாலைக்கு அழைத்து இரகசிய கூட்டம் ஒன்றை நடத்திய அதிபர் அஸீஸ் அவர்கள் தனது பாடசாலையில் மல சல கூட வசதிகள் நீர் வழங்கல் வசதிகள் இட வசதிகள் என்பன அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவற்றுக்கு ரூபா. 250,000 பணம் தேவையெனவும் இதனை பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடமோ அரசாங்கத்திடமோ எவ்விதத்திலும் அறிவிக்காமல் தந்திரமாக அவரால் நியமிக்கப்பட்ட குழுவினூடாக வழங்கப்பட்டாலேயே இம் மாணவர்களுக்கு அனுமதி வழங்க முடியும் என வலியுறுத்தியுள்ளார்.
செய்வதறியாத பெற்றோர்கள் இதன் பின்னர் வேறு பாடசாலையில் அனுமதி பெற முடியாது என்ற இக்கட்டான நிலையில் ரூபா.1000 முதல் ரூபா.5000 வரை இவருக்கு இலஞ்சமாக கொடுத்து வருகிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்த அதிபர் கடந்த வருடமும் இதே தேவைகளை சுட்டிக் காட்டி இதே தொகைப் பணத்தை மக்களிடம் லஞ்சமாகப் பெற்று ஏப்பமிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தினால் இப்பாடசாலைக்கு எவ்வித பண உதவியும் கிடையாமையாலேயே இப் பணத்தொகையை கோருவதாகவும் ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளார். மேலும் இப் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராக உள்ள ஆசிரியர் ஒருவர் அதிபரின் கூற்றுக்களை சரிப்படுத்தி எல்லோரையும் வற்புறுத்துவது, அவருக்கும் இந்த லஞ்சத்தில் பங்குண்டோ என்ற சந்தேகத்தை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
கல்வி அமைச்சிக்கும் மாகாண கல்வி அமைச்சிக்கும் இது சம்பந்தமாக பெற்றொர்கள் விளக்கம்கோரி கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக கூறினார்கள்.
மட்டக்களப்பு விசேட தொடர்பாளர்.
No comments:
Post a Comment