Wednesday, December 9, 2009

அரசியல் நாகரீகம் : மன்னிப்பு கேட்டார் பிரதமர் மன்மோகன்சிங்

புதுடில்லி : காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் வாஜ்பாயியை மோசமாக விமர்சித்ததற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று மன்னிப்பு கேட்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை நேற்று லோக்சபாவில் லிபரான் அறிக்கை மீதான விவாதம் நடந்து ‌கொண்டிருந்த போது காங்கிரஸ் உறுப்பினர் பேனி பிரசாத் வர்மா தரக்குறைவாக விமர்சித்தார். இதற்கு அவையில் பா.ஜ., வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேனி பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி கூச்சலிட்டனர். அவையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக அவை சுமார் 20 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் மன்னிப்பு : இந்நிலையில் இன்று காலையில் அவை கூடியவுடன் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நடந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் அரசு சார்பில் தான் அவையில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது : நேற்று நான் அவையில் இல்லை. இருப்பினும் உறுப்பினர் பேனி பிரசாத் வர்மா முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை விமர்சித்ததாக கேள்வி பட்டேன். அதற்காக அரசு சார்பில் தற்போது அவையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி அரசியல் நாகரீகத்தை நி‌லைநாட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com