Wednesday, December 16, 2009

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி விருந்துபசாரம் அளிப்பது சட்டத்திற்கு முரணானது.

நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் அவசரக் கடிதம். ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் வேட்பாளரும் நாட்டின் தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ அரச ஊழியர்களுக்கு விருந்துபசாரம் அளிப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது எனவும் அரச செலவில் இடம்பெறும் அந்நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துமாறும் தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்காவிற்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேர்தல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர், இவ்விடயம் தொடர்பாக பல பெரும் எண்ணிக்கையான முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றை கருத்தில் எடுத்து தேர்தல் திணைக்களம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்துமூலம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்கள் சட்டதிட்டங்களை பின்பற்றும் முறையில் செயற்படுவர் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment