Friday, December 11, 2009

ஜனாதிபதி-சுங்க அதிகாரிகள் அலரி மாளிகையில் சந்திப்பு : தேர்தல் ஆணையாளரால் ரத்து.

சுங்கத்திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்குமான சந்திப்பொன்று நாளை 12 ம் திகதி அலரி மாளிகையில் ஏற்பாடாகியிருந்தது. இச்சந்திப்பானது தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச உத்தியோகித்தர்களை ஈடுபடுத்துவதாக அமைந்துள்ளது என அகில இலங்கை சுங்ச சேவைகள் சங்கம் குற்றஞ்சாட்டியிருந்ததுடன், குறிப்பிட்ட நிகழ்வை ரத்துச் செய்யமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு முறையீடும் செய்திருந்தனர்.

அகில இலங்கை சுங்க சேவைகள் சங்கத்தினரின் முறைப்பாட்டை பரிசீலித்த தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்ட சந்திப்பை ரத்துச் செய்துள்ளார். இவ் ரத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் எழுத்துமூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பொருட்டு சுங்கத் திணைக்களத்தின் (வினியோகப்பிரிவு) பிரதி இயக்குனர் அசங்க தயாரத்னவினால் தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தல் சுங்க அதிகாரிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் சுங்கத் திணைக்களத்தின் சகல இயக்குனர்கள், பிரதி இயக்குனர்களை கலந்து கொள்ளுமாறு சுங்கத்திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் திரு. ஜெயதிலக அவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தாகவும் அதற்காக சுங்கத்திணைக்கள கடிதத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருந்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment