ஏசியன் றிபியூன் இணையத்தளத்திடம் நஸ்டஈடு கோரி சரத் பொன்சேகாவின் மருமகன் வழக்கு.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் துனுன திலகரட்ண ஏசியன் றிபியூன் இணையத்தளத்திற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளார். இது விடயமாக அவர் தனது சட்டத்தரணியான சரித்த என் கல்கேன வூடாக கடந்த Nov 27 இரு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் ஏசியன் றிபியூன் இணையத்தில் வெளியான ஆக்கங்கள் தனதும் தனது குடும்பத்தினதும் நற்பெயருக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும், அடிப்படை ஆதாரங்கள் எதுவும் அற்றவை எனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ‘Hiko(p)’ Co கம்பனி எந்தவொரு காலகட்டத்திலும் இலங்கை இராணுவத்திற்காக ஆயுதக் கொள்வனவுகளிலோ அதனுடன் தொடர்புடைய விடயங்களிலோ ஈடுபட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக குறிப்பிட்ட கட்டுரைகளின் உரிமையாளரான கே.ரி. ராஜசிங்கமும் ஏசியன் றிபியூண் இணையமும் முறையே 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஸ்டஈடாக செலுத்தவேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட கடிதத்திற்கு பதிலளிப்பதற்கு எழுத்தாளருக்கும் இணையத்தள நிர்வாகத்திற்கும் 14 நாட்கள் தவணை வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment