எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்தவிற்கு உதவியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் புலிகளின் தற்போதையை தலைவர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ள கே.பி யை சந்தித்து பேசியதாக ஜேவிபி சார்பு இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் கேபியைச் சந்தித்து பேசிய அமைச்சர், சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றி பெற்றால், கே.பி உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் தலைவர்கள் பலரும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என தெரியப்படுத்தியதாகவும், தேர்தலில் மஹிந்த வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகளை தமது தொடர்புகளுடாக செய்யுமாறு வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கேபி அவ்வாறு செய்வதாயின் தடுப்புக்காவலில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலரை விடுவிக்குமாறும் அவர்கள் ஊடாக அப்பணியை செய்யமுயுமென தெரிவித்தாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சார காலங்களில் அரசியல் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் சேறுபூசும் நோக்கில் இவ்வாறான செய்திகளை பரப்புவது வழமையாகும். எது எவ்வாறாயினும் இச்செய்தியில் உண்மைகள் இருந்தால் அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.
No comments:
Post a Comment