இடம்பெயர்ந்துள்ள மக்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளும் வாக்களிக்க ஏற்பாடு.
யாழிலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும் வாழும் மக்களும் , கடந்த யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டும் , சரணடைந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளும் தமது வாக்குகளைச் செலுத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2000 பெண் போராளிகள் உள்ளிட்ட 11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் 17 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மூன்று முகாம்கள் நிரந்தர தடுப்பு முகாம்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இம்முகாம்களில் உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தடுப்பு முகாம்களில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் பதிலளிக்க உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு சிறந்த முறையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் யாழில் வாக்காளர் பதிவுள்ளவர்கள் தாம் கொழும்பில் வதியும் இடத்திற்கு அருகாமையில் அமையக்கூடிய வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குகளை செலுத்த ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு நாளை முதல் வெள்ளவத்தை தபால் நிலையத்தில் கருமப்பீடம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இக்கருமப்பீடத்திற்கு சென்று யாழ் வாக்காளர்கள் தமது ஆவனங்களைச் சமர்பித்து உரிய பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment