Tuesday, December 1, 2009

சதாம் உசேன் பெயரில் ஆதரவாளர்கள் புதிதாக டி.வி. சேனல்

சதாம் உசேன் பெயரில் அவரது ஆதரவாளர்கள் மர்மமான முறையில் புதிதாக டி.வி. சேனல் தொடங்கியிருக்கலாம் என ஈராக் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் பக்ரீத் பண்டிகை (ஹஜ் பெருநாள்) அண்மையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டிய விடுமுறை தினமான கடந்த சனிக்கிழமையன்று, அங்கு ஒளிபரப்பாகும் தொலைஜக்காட்சி ஒன்றில், தூக்கிலிடப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேன் திடீரென தோன்றினார்.

தோன்றியது மட்டுமின்றி ஈராக் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தூக்கிலிடப்பட்ட 3 ஆவது ஆண்டு நினைவு நாளன்று, அவர் ஆற்றிய உரைகளை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது. மேலும் சதாம் உசேன் இராணுவ உடையிலும், சூட்- கோட் உடையிலும் தோன்றிய புகைப்படங்களும், அவர் வெள்ளை குதிரையில் கம்பீரமாக வந்த காட்சியும் அடிக்கடி அன்றைய தினம் ஒளிபரப்பப்பட்டது.

இது ஈராக் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உரையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது யார் என்ற மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், சதாம் உசேன் பெயரில் அவரது ஆதரவாளர்கள் மர்மமான முறையில் புதிதாக டி.வி.சேனல் தொடங்கியிருக்கலாம் என ஈராக அரசு தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆட்சிக்காலத்தின்போது சதாம் உசேன் 'பாத்' என்ற பெயரில் கட்சி தொடங்கியிருந்தார். அந்த கட்சியினர் புதிய டி.வி.யை தொடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

சிரியா நாட்டில் உள்ள மாஸ்கஸ் நகரைச் சேர்ந்த முகமது ஜர்போயா என்பவர் இந்த டி.வி.யின் தலைவர் என்றும் கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com