சிதம்பரம் கோயிலுக்கு இலங்கை இந்துக்கள் வர அனுமதி வேண்டும்: பாஜ தலைவர்
சிதம்பரம் கோயில் விழாவில் வழிபாடு செய்ய இலங்கை இந்துக்கள் வருவதற்கு இந்திய இலங்கை அரசுகள் அனுமதிக்க வேண்டுமென்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பாஜ தலைவர் இல.கணேசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திருவாதிரையை முன்னிட்டு, இலங்கை இந்துக்கள் சிதம்பரம் வருவது காலம்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்காகவே, அவர்கள் வரும்போது தங்குவதற்கு சிதம்பரத்தில் மடாலயங்களை கட்டி வைத்துள்ளனர். போர்ச் சூழல் காரணமாக அவர்களின் இந்த யாத்திரையில் சிறிது தொய்வு ஏற்பட்டிருந்தது. போர் முடிவடைந்துள்ள நிலையில், டிசம்பர் 31ம் தேதி தொடங்கி 11 நாள் நடக்கும் திருவாதிரை வழிபாடுகளில் பங்கேற்க அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
இலங்கை தமிழர்கள் நம்பிக்கை பெறுவது இன்றைய நிலையில் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப இந்த விஷயத்தை இந்திய அரசும், இலங்கை அரசும் கையாள வேண்டும். முந்தைய காலங்களில் இருந்ததைப் போல, இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து படகு அல்லது கப்பல் பயணமாக இங்கு வந்து சென்றது போல, தமிழகம் வர இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.
0 comments :
Post a Comment