தெஹிவல ரயில் குண்டுவெடிப்பின் சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கின்றது.
அழுத்கம நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் வண்டியில் கடந்த 2008.06.04 இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான சுப்ரமணியம் ஜதிஸன், தியாகராஜா நிஸாந்தன் ஆகிய இருவரையும் தொடர்ந்தும் டிசம்பர் 21ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிமன்றின் மேலதிக மஜிஸ்ரேட் ருசிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியலாளராக கடமையாற்றிவந்த சந்தேக நபர்களில் ஒருவரான சுப்ரமணியம் ஜதிஸன், தனது சகோரதனை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த புலிகள், அவரை விடுவிப்பதாயின் தென்னிலங்கையில் சனநெருக்கடியான பிரதேசம் ஒன்றில் குண்டொன்றினைப் பொருத்துமாறு நிபந்தனை விதித்திருந்தாகவும், தனது சகோதரனை விடுவிக்கும் பொருட்டு தான் குறிப்பிட்ட அழுத்கம ரயிலில் குண்டினை பொருத்தியதுடன், தெஹிவல பிறேசர் அவனியூ பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டொன்றை பொருத்தி றிமோட் கொன்றோலர் மூலம் அதை வெடிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் தாக்குதல்களை நாடாத்திவிட்டு முல்லைத்தீவுக்கு தப்பிச் சென்றுகொண்டிருந்தபோது, இரட்டைப்பெரியகுளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment