Wednesday, December 23, 2009

ஜனாதிபதி இன்று மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக தெரியவருகின்றது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் முக்கியஸ்தர்கள சுட்டுக்கொல்லப்பட்டதாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்ததாக வெளியாகியிருந்த கருத்துக்கள் தொடர்பாகவே அவர் மக்களுக்கு உரையாற்றுவார் என நம்பப்படுகின்றது.

குறிப்பிட்ட கருத்து சர்வதேச மட்டத்தில் பலத்த சர்ச்சைளை கிளப்பியுள்ள இச்சந்தர்பத்தில் இக்கருத்தினால் நாடு எதிர்கொண்டுள்ள சிக்கல் தொடர்பாக அவர் விளக்குவார் என தெரியவருன்கின்றது. குறிப்பிட்ட கருத்து தொடர்பாக ஐ.நா இலங்கயிடம் விளக்கம் கோரியுள்ளமை யாவரும் அறிந்ததே.

No comments:

Post a Comment