முஸ்லிம்களை அவமதித்த பொன்சேகாவை மு.கா. வேட்பாளர் என்று கூறுவது கேலிக்கூத்து
ஹக்கீமின் கருத்திற்கு ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர் பதில்.
முஸ்லிங்களை அவமதித்த சரத் பொன்சேகாவை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் என்று கூறியுள்ள மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியை அடகு வைத்துள்ளார் என ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் பி. இராதாகிருஷ்ணன், கிழக்கு மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், இ. தொ. கா. தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சரத் பொன்சேகா எமது கட்சியின் வேட்பாளராகவே விளங்குகின்றார் என பத்திரிகை ஒன்றில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் சிறுபான்மை விரோதக் கருத்துக்களுக்கெதிராக அறிக்கை வெளியிட்ட ரவூப் ஹக்கீம், 2009 செப் டெம்பர் மாத பத்திரிகை அறிக்கை ஒன்றில் சரத் பொன்சேகாவினால் வெளியிடப்பட்ட இனத்துவேசமான கருத்தை மிகவும் கண்டித்துள்ள அவர், இன்று சரத் பொன்சேகா தனது கட்சியின் வேட்பாளர் என்று குறிப்பிட்டுள்ளமை எவ்வளவு கேலிக்கூத்தாகவுள்ளது. இந்த இரட்டை வேடத்தின் யதார்த்தம் என்ன?
அஸ்வர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இன்று நாடு போகின்ற போக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் மிகப்பெரும்பான்மை எண்ணிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிப்பதற்குத் தீர்மானித்துவிட்டனர். இதனை நாடெங்கும் சுற்றி வருகின்றபோது நன்றாக உணர முடிகின்றது.
இதனிடையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாகப் பிரசாரம் செய்து வருகிறார்.
முஸ்லிம் காங்கிரஸ் கலிமாவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் தலைவர்களாக விளங்கிய ஸேர், மாக்கான் மாக்கார், டாக்டர் ரீ.பி. ஜாயா ஸேர் ராஸிக் பரீத் டாக்டர் எம். k. எம். கலீல், k. ஏ. எஸ். மரிக்கார், எச். எஸ். இஸ்மாயில், டாக்டர் பதியுத்தீன், எம். ஏ. பாக்கீர் மாக்கார் போன்ற எவரும் அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்தவில்லை.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஒருபோதும் யாருக்கும் அடகு வைக்கவில்லை. தனது கட்சியைத் எந்த சக்திக்கும் தாரைவார்த்துக் கொடுக்கவுமில்லை. ஆனால், இன்றைய தலைவரோ கட்சியை அடகு வைத்து கட்சியின் இலட்சியங்களையே மறந்து செயற்படுகின்றார்.
நேற்று முஸ்லிம்களை அவமானப்படுத்தி, அவர்கள் வந்தேறு குடிகள் என்ற கருத்தில் பேசியுள்ளார் பொன்சேகா என்று கண்டனம் தெரிவித்த ரவூப் ஹக்கீம், இன்று அவர் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராகவே இருப்பதாகக் கூறுவதை முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகளே வியப்போடு பார்க்கின்றனர். இவ்வாறாக, முன்னுக்குப் பின் முரணான கூற்றுக்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வெளியிட்டு வருவதனால் சமூகத்தை ஏனையோர்கள் எள்ளி நகையாடுகின்றனர்.
ரவூப் ஹக்கீம் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார். பற்பல கூட்டங்களில் பங்குபற்றுகிறார். வெளிநாட்டுச் சக்திகள் பலவற்றோடு தொடர்புகளை வைத்துள்ளார். அவர் வெளிநாட்டிலிருந்து முஸ்லிம்களுக் காக எதனையும் கொண்டு வந்து கொடுத்துள்ளாரா? ஒரு ரோட்டுக்காவது தார் போட்டுள்ளாரா? ஒரு கிணறாவது கட்டியுள்ளாரா?
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், இந்நாட்டு முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் ரவூப் ஹக்கீமின் சுயநலவாதக் கருத்துக்களைப் புறந்தள்ளி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்து விட்டனர் என்றும் அஸ்வர் குறிப்பிட்டார்.
நன்றி தினகரன்
4 comments :
அடேய் மாடா அஸ்வர் பணத்துக்காக எதையும் செய்யும் கூட்டம் தான் நீங்கள் எல்லோரும் ஹகீம் உட்பட இதில் எங்களை கூறு போடாமல் இருங்கடா நாய்களா இஸ்லாமிய பேங்க் திறந்து அடித்தது போதாதா? அவன் ஹக்கீமும் நல்லவனில்ல தான் உன்னுடன் இருக்கும் கூட்டம் (ஹிஸ்புல்லா )நல்லவனுகளா?
சரத்பொன்சேகா அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடும் போது சொன்ன கருத்துக்கு? ஒட்டுண்ணி அஸ்வர் அப்போது எதுவித கண்டனமும் தெரிவிக்காமல் சுயநலத்துக்காக வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு இப்போது ஊளைவிட்டுத்திரிவது எதற்காக? அதுவும் சுயநலத்துக்காகத்தான் என்பது சிந்திக்ககூடிய மக்களுக்கு நன்றாகப்புரியும். மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அக்கருத்துக்கு எதிர்ப்புதெரிவிக்கும் போதே கூடவும் ஒன்று சொல்லி இருந்தார் அதாவது மஹிந்த சொல்லிக்கொடுத்தான் சரத்பொன்சேகா இப்படிக்கூருகிறாரா என்கிற சந்தேகம் சிறுபான்மை மக்கள் மத்தில் எழுகிறது என்று. அப்போது கூட மகிந்தவோ அல்லது அவரது ஒட்டுண்ணி அஸ்வரோ சரத் பொன்சேகாவை சிறிதளவேனும் கண்டித்தது கிடையாது. ஆனால் சரத் பொன்சேகா சொன்னகருத்து ஊடகத்தில் திரித்துக்கூரப்பட்டது என்று சரத்போசெகவே சிறபான்மை மக்களை பார்த்துக்கூரியபோதும் கூட சரத்போனசெகாவை விமர்சிக்கும் சமூகத்தைக்காட்டிக்கொடுக்கும் சுயநலவாதிகள். முஸ்லிம்களை கிழக்கில் கொண்டு குவித்தவர்களை எல்லாம் கூடவே வைத்துள்ள மகிந்தவுக்கு வக்காலத்து வாங்குவது எந்தவகையில் நியாயம். அதுமட்டுமல்லாது. இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் வந்தேறு குடிகளாவார்கள். சிங்கள மக்கள் மட்டுமே இந்நாட்டின் பூர்வீக குடிகளாவார்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும்,சுற்றாடல் அமைச்சரும்,மகிந்தவின் நண்பருமாகிய பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்த கருத்துக்கு இதுவரைக்கும் எதிர்பைக்காட்டாத ஒட்டுண்ணி அஸ்வரை சமூகம் இனம்கண்டு துரத்தியடிக்கவேண்டும்.

ஐயா roosan முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் புலிப்பாசிசத்தை இஸ்லாமியர்களிடம் (உங்கள் பாசையில் சொல்வதன்றால்) சோனியிடம் காட்டாதீர்கள்.
Post a Comment