பாதுகாப்பு செயலரை பாதுகாக்க வேண்டியதேவை எனக்கில்லை. சரத் பொன்சேகா
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா, டெய்லி மிரர் Hot Seat எனும் நேர்காணலில் இலங்கை இராணுவத்தினுள் பிளவுகள் மேற்கொள்ளப்படுகின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் கடந்த இரு தினங்களாக சிங்க ரெஜிமன்டின்ட் சுற்றி வழைக்கப்பட்டு, ஆயுதங்கள் இராணுவப் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலைமையானது இராணுவத்தை பிளவு படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் போர்குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக நிலவும் கருத்துக்கள் தொடர்பாக கூறுகையில், போர் இடம்பெற்றபோது எந்த சந்தர்ப்பத்திலும் யுத்த குற்றங்கள் இடம்பெறவில்லை. நாம் சர்வதேச போர் விதிமுறைகளுக்கு இணங்கவே யுத்தத்தை மேற்கொண்டோம். அவ்வாறு எதாவது இடம்பெற்றிருந்தால் அவற்றை நாம் அப்போதே தடுத்து நிறுத்தியிருப்போம். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்போம். எனவே இவ்விடயத்தில் வெளியாட்கள் வந்து விசாரணைகளை மேற்கொள்ள நாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கும் தனக்கும் இடையேயான முரண்பாடுகள் தொடர்பாக கூறுகையில், இராணுவத் தளபதியான நான் எனது படையை திறம்பட செயற்படுத்தினேன். ஆனால் காட்போட் கதாநாயகர்கள், போரில் பரிட்சயமற்றவர்கள் மிகவும் கீழ்தரமாக நடந்து கொண்டார்கள். குறிப்பாக பாதுகாப்புச் செயலர் தளத்தில் நின்ற கீழ் மட்ட தளபதிகளை நேரடியாக தொடர்பு கொண்டு சில விடயங்களை மேற்கொள்ளுமளவிற்கு தமது பரிட்சயமின்மையை வெளிப்படுத்தியிருந்தார். எதுஎவ்வாறாயினும் போர் முழுவதையும் நான் அவதானித்துக்கொண்டிருந்தேன் மிகவும் கடுமையான கட்டளைகளையே பிறப்பித்திருந்தேன். அவற்றையே எனது படையினர் நிறைவேற்றினர். அவர்கள் ஏதும் துஸ்பிரயோங்கள் மேற்கொண்டுள்ளதாக நான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment