முன்னாள் அதிபர் சந்திரிகா அதிரடி நடவடிக்கையில் இறங்குகின்றார். மகன் அரசியலில் அறிமுகம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அரசியலில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கைளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. தனது தந்தை காலஞ்சென்ற முன்னாள் பிரதர் பண்டாரநாயக்கவின் பிறந்த நாளான ஜனவரி 8ம் திகதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல பிரதேச சிரேஸ்ட உறுப்பினர்களையும் மஹிந்த அரசினால் ஒதுக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் தனது வீட்டிற்கு அழைத்து புதிய அரசியல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றது. இத்தினத்தில் அவரது மகன் விமுக்தி குமாரணதுங்கவை அரசியலுக்கு அறிமுகம் செய்து வைக்கவுள்ளதகாவும் அச்செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 20 லட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை அன்பளிப்புச் செய்யச் சென்றிருந்த அவர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், தனக்கு தற்போது எந்தவொரு கட்சியும் கிடையாது எனவும், தனது கட்சியினால் தான் துரத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துடன் எதிர்வரும் தேர்தலில் நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒருவருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் ஆனால் எந்த வேட்பாளரினதும் பிரச்சார மேடையில் ஏறப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment