Tuesday, December 22, 2009

நியமனங்களை வழங்குவதில் தவறுகளை செய்துள்ளளேன் : ஜனாதிபதி.

அரச திணைக்களங்கள் மற்றும் அரசின் உயர்மட்டங்களில் மேற்கொண்ட நியமனங்களில் ஒன்று இரண்டில் தான் தவறிழைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தொழில்சார் நிறுவனங்களின் சம்மேளத்தின் மிக முக்கியமான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதை அவர் தெரிவித்துள்ளார்.

எவரதும் பெயரை குறிப்பிடாது மேற்காண்டவாறு தெரிவித்த அவர் மேலும், எம்மிடம் சகல இடங்களுக்கும் பொருத்தமானவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவசரமாக விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்த காரணங்களால் நான் சிலவற்றை சரியாக செய்யவில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளேன். இந்த நாட்டின்மீது பற்றுள்ளவர்கள் என நான் எடைபோட்டிருந்தவர்கள், காட்டிக்கொடுப்பவர்களாக மாறியுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com