சரத்பொன்சேகா விடயத்தில் என்னை முன்னாள் நீதியரசர் எச்சரித்தார். கோத்தபாய
யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தனது காரியாலயத்திற்கு அழைத்த முன்னாள் நீதியரசர், சரத் பொன்சேகா விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறு இரு மணித்தியாலய நேரங்களாக மிகவும் விரிவாக விளக்கி எச்சரித்தாக கோத்தாபாய கடந்த 19ம் திகதி இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு பேசுகையில், என்னை தனது காரியாலயத்திற்கு அழைத்த முன்னாள் பிரத நீதியரசர், இராணுவத் தளபதியின் பயங்கரமான முகத்தை தெளிவுபடுத்தியதுடன் தொடர்ந்தும் அவருக்கு பதவி நீடிப்புக்களை வழங்கி அதனால் சிக்கல்கள் உருவாகின் தன்னிடம் சட்டரீதியாக எந்த உதவியையும் நாடவேண்டாம் என எச்சரித்தார். ஆனால் நாம் ஒரு கொள்கையினை நோக்கி சென்றுகொண்டிருந்தோம், அதன் இலக்கை அடையவேண்டும் என்பதற்காக எவருடைய ஆலோசனைகளையும் செவிமடுக்க மறுக்க நேரிட்டது எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சரத் பொன்சேகாவின் இரு மகள்மாரும் அமெரிக்காவில் கல்வி பயிலுவதற்கு ஜனாதிபதியின் நிதியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுவந்தது. அது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதற்கும் அப்பால் 100 மில்லியின் ரூபா பெறுமதியான நிலம் கொழும்பில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத வாகனம் ஒன்று அவருக்கு 2 மில்லியன் ரூபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்ததுடன் , ஆனால் இத்தனை சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டு புலிப்பயங்கரவாதிகளுக்கு துணைபோனவர்களுடன் இன்று சரத் பொன்சேகா கைகோர்த்துள்ளார் என்றால் அதற்கு பின்னால் உள்ள நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.
0 comments :
Post a Comment