Thursday, December 17, 2009

இராணுவத் தளபதியை பதவி நீக்கியதற்கும் இந்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டதால் தான், சரத் பொன்சேகாவை ராணுவ தளபதி பதவியில் இருந்து இலங்கை அரசு நீக்கியது என்ற தகவலை இலங்கை அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வெளியாகும், "நேஷன்' என்ற பத்திரிகையில்,
"இலங்கையில் புலிகளை தோற்கடிக்க காரணமாக இருந்த ராணுவ தளபதி பொன்சேகா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தரவின் பேரில் தான், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

"இலங்கை அரசுக்கு எதிராக ராணுவ புரட்சி உருவாகும்' என, நம்பகமான உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இதுவே சரத் பொன்சேகாவின் பதவி நீக்கத்திற்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் சிலர் இத்தகவலை தெரிவித்ததாகவும், அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் கெகலிய கூறியதாவது: இலங்கையில் இறையாண்மை கொண்ட ஒரு அரசு உள்ளது. ராணுவத்தின் நிர்வாக அதிகாரங்கள் எல்லாம் அதிபரிடம் தான் உள்ளன. ராணுவ அதிகாரிகள் நியமனங்களை எல்லாம் அவர் தான் கையாள்கிறார். ராணுவ அதிகாரிகள் நீக்கம் அல்லது பதவி உயர்வு எல்லாம் சில பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.

அண்டை நாடுகள் அனைத்துடனும் நாங்கள் சுமுகமான உறவு கொண்டுள்ளோம். அந்த நாடுகள் ஆலோசனை தெரிவித்தால், அதை வரவேற்போம். ஆனால், எங்கள் நாட்டில் உள்ள அமைப்பு முறை மற்றும் நிர்வாக முறைகளின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுப்போம்.மற்ற நாடுகளின் உத்தரவின் பேரில் எடுக்க மாட்டோம். இந்திய பிரதமர் மன்மோகன் கேட்டுக் கொண்டதால் தான், ராணுவ தளபதி பதவியில் இருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டார் எனக் கூறப்படுவது தவறானது.இவ்வாறு ராம்பக்வெல்லா கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com