எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாகவுள்ள அரசாங்கத்தில் தானே நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமமந்திரி என எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இக்கருத்தினை முற்றாக மறுத்துரைத்துள்ள ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாகவுள்ள காபந்து அரசாங்கத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும் அமைச்சர்களுமே காணப்படுவர் எனவும் அங்கு நிறைவேற்று அதிகாரங்களுடன் எவரும் இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment