இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைத் புலிகள் அனைவரையும் விடுதலை செய்து அவர்களை தமது குடும்பங்களுடன் இணைய அனுமதிக்கவேண்டும் என ஐ.நா சபையின் "யுத்தத்தில் குழந்தைகள்" எனும் பிரிவுக்கான பிரதிநிதி Major General Patric Cammaertவேண்டியுள்ளார்.
இது தொடர்பாக Major General Patric Cammaert வெளியிட்டுள்ள அறிக்கையில், நூற்றுக்கணக்கான குழந்தைகள் இன்னும் காணமல் போனவர்களாகவுள்ளனர். புலிகளினால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட அவர்கள் முடிந்தவரை சீக்கிரம் வீடு திரும்பவேண்டும் எனவும் தான் இலங்கைக்கு மேற்கொண்ட 5 நாள் விஜயத்தின் போது புலிகளினால் பலவந்தமாக படையில் இணைக்கப்பட்ட 300 சிறுவர்களை சந்திக்க நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் உதவிகளை செய்து கொடுப்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் , ஐ.நா வின் குழந்தைகளை காப்பாற்று (Save the Children ) நிறுவனங்கள் சகல முகாம்களுக்கும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment