இலங்கை வந்த வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பிரபாகரனை பாதுகாக்க முற்பட்டனர்: சிறிசேன
இலங்கைக்கு விஜயம் செய்த 99 சதவீதமான வெளிநாட்டு முக்கியஸ்தர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை பாதுகாக்க முற்பட்டதாக விவசாய அபிவிருத்தித்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்த எந்த வெளிநாட்டவரும், அவர்களின் நடவடிக்கைகளுக்காகவோ, இலங்கைக்கான உறவு வலுப்படுத்தலுக்காகவோ வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையில் யுத்த நிறுத்ததை அமுல்படுத்தி, பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே வெளிநாட்டு அழுத்தங்கள் அமைந்திருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வெளிநாட்டவர்களின் அழுத்தங்களுக்கு இணக்கம் காட்டாததால், தற்போது அவர்கள் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் பிரதிநிதியே சரத் பொன்சேகா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா ஒரு தீவிர இராணுவப் போக்காளர், அவர் தற்போது வெளிநாட்டின் சதித்திட்டத்துக்கு ஆதரவளித்து வருகிறார்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே வி பி என்பன வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான நிதிகளை பெற்று, ஆட்சி மாற்றத்துக்கு முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
0 comments :
Post a Comment