சிறிலங்கா அரசை ஐ.நா. விளக்கம் கோரியிருப்பது வியப்பளிக்கிறது. -போகல்லாகம-
சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியிருப்பது தமக்கு வியப்பளிக்கிறது. மிகப்பாரதூரமான ஓரு விடயத்தை ஊடகவியலாளர் ஒருவரிடம் தான் அறிந்துகொண்டதாக அரசியல்வாதி ஒருவர் கூறினார் என்று தெரிவித்து அதனை ஆதாரமாக கொண்டு, ஐக்கிய நாடுகள் சபை எம்மிடம் விளக்கம் கோருகின்றது என்றால், இதைவிட பொறுப்பற்ற செயல் வேறு ஒன்றுமே இருக்கமுடியாது. உண்மையிலேயே ஐ.நா. இந்த செயல் எமக்கு மிகுந்த வியப்பை அளித்துள்ளது.
போர் முடிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் கேள்விப்பட்ட சம்பவத்தை போர் முடிவடைந்து எட்டு மாதங்களின் பின்னர் பொன்சேகா வெளியிட்டிருக்கிறார் என்றால், இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை முதலில் உணரவேண்டும் - என்றார் ரோகித்த போகல்லாகம .
0 comments :
Post a Comment