Monday, December 21, 2009

ஸ்ரீகாந்தாவைத் தவிர்ந்த வேறு எவரும் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிக்க மாட்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுத்த தீர்மானம் அதிருப்தி அளிப்பதாக கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் அவருடைய தீர்மானம் குறித்து விமர்சிக்க முடியாத போதிலும் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் புறந்தள்ளி செயற்பட்டுள்ளதாக சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது அதனை பகிஷ்கரிப்பதோ என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த இறுதித் தீமானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும், விரைவில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியன்னாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு நாடு திரும்பிய சம்பந்தன், ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வேளையில் சிவாஜிலிங்கம் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை எனவும், மக்கள் வாக்களிக்கும் போது இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்.ஸ்ரீகாந்தாவைத் தவிர்ந்த வேறு எவரும் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment