உலக நாடுகள் 560 கோடி நிதி அளிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிதியானது 25 நாடுகளில் பிரச்னைகளோடு வாழும் 4 கோடியே 80 லட்சம் மக்களுக்கு 2010ஆம் ஆண்டில் உதவி செய்ய வசதியாக இருக்குமென்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
"25 நாடுகளில் வாழும் மக்களின் நல்வாழ்விற்காக 560 கோடி நிதி அளிக்குமாறு அந்நாடுகளின் மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த அவசர நிதியுதவியின் பெரும்பகுதி நீண்ட காலமாகப் பெரும் பிரச்சனைகள் நிலவும் ஆப்கானிஸ்தான், காங்கோ, சூடான், கென்யா, பாலஸ்தீனம், சோமாலியா, உகாண்டா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளுக்குப் பயன்படுத்தப்படும். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு சுயமரியாதையுடன் கெளரவமாக வாழ அனைவருக்கும் உரிமை உண்டு" என ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கீ மூன் கூறினார்.
வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் வசதியாக வாழும் நிலையில் அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கப் பெற்றிடாத மக்களுக்கு அவற்றைக் கிடைக்குமாறு செய்யும் நோக்கத்திற்காகத் தான் உலக நாடுகளில் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. உலக பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் 2010ஆம் ஆண்டிற்கான நிதி உதவியானது குறையும் என்பது தவிர்க்க முடியாதது. இருப்பினும் உலக நாடுகள் மற்றும் தனிநபர்கள் தங்களால் முடிந்தளவு நிதி அளித்திட வேண்டும் என்று பான் கீ மூன் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment