Wednesday, December 2, 2009

நிதி​யு​தவி கோரு​கி​றது ஐ.நா.

உலக நாடு​கள் 560 கோடி நிதி அளிக்​கு​மாறு ஐ.நா. வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. இந்த நிதியானது 25 நாடு​க​ளில் பிரச்​னை​க​ளோடு வாழும் 4 கோடியே 80 லட்​சம் மக்​க​ளுக்கு 2010ஆம் ஆண்​டில் உத​வி​ செய்ய வச​தி​யாக இருக்​கு​மென்று ஐ.நா. தெரிவித்துள்​ளது.

"25 நாடு​க​ளில் வாழும் மக்​க​ளின் நல்வாழ்விற்காக 560 கோடி நிதி அ​ளிக்​கு​மாறு அந்​நா​டு​க​ளின் மக்களின் சார்​பாக நான் கேட்​டுக்​கொள்​கி​றேன்.

இந்த அவ​சர நிதி​யு​த​வி​யின் பெரும்​ப​குதி நீண்​ட ​கா​ல​மாகப் பெரும் பிரச்சனை​கள் நில​வும் ஆப்​கா​னிஸ்​தான்,​ காங்கோ,​ சூடான்,​ கென்யா,​ பாலஸ்தீனம்,​ சோமா​லியா,​ உகாண்டா,​ ஜிம்​பாப்வே உள்​ளிட்ட 12 நாடுகளுக்குப் ​ பயன்​ப​டுத்​தப்​ப​டும். அடிப்​ப​டைத் தேவை​க​ளைப் பூர்த்தி செய்​து​கொண்டு ​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் கெளர​வ​மாக வாழ அனை​வ​ருக்​கும் உரிமை உண்டு" என ஐ.நா.வின் பொதுச்​செ​ய​லர் பான் ​கீ ​மூன் கூறினார்.

வளர்ந்த நாடு​க​ளில் உள்ள மக்​கள் வச​தி​யாக வாழும் ​நி​லை​யில் அடிப்படைத் தேவை​கள்​ கூட கிடைக்​கப் ​பெற்​றி​டாத மக்​க​ளுக்கு அவற்றைக் கிடைக்​கு​மாறு செய்​யும் நோக்​கத்​திற்​கா​கத் தான் உல​க ​நா​டு​க​ளில் நிதி திரட்ட முடி​வு​ செய்​யப்​பட்​டது. உலக பொரு​ளா​தா​ரத்​தில் சரிவு ஏற்​பட்​டுள்ள நிலை​யில் 2010ஆம் ஆண்டிற்​கான நிதி​ உ​த​வி​யா​னது குறை​யும் என்​பது தவிர்க்​க​ மு​டி​யா​தது. இருப்பி​னும் உலக நாடு​கள் மற்​றும் தனி​ந​பர்​கள் தங்களால் முடிந்​த​ளவு நிதி அளித்​திட வேண்​டும் என்று பான் கீ ​மூன் கேட்டுக் ​கொண்​டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com