Sunday, December 13, 2009

பூமி வெப்பமாவதால் இமயமலை உருகிவிடும்: பருவநிலை மாநாட்டில் ஐ.நா. அறிக்கை

பருவநிலை மாற்றம் தொடர்பாக டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹெகன் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு சார்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், "சர்வதேச அளவில் பூமியின் வெப்பநிலை உயர்ந்து வரும் சராசரி அளவை விட, இமயமலையின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் இமயமலை மற்றும் இந்துகுஷ் மலைகளில் சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும். அதனால், அவை உருகத் தொடங்கும். எனவே, கடுமையான வறட்சி அல்லது மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கு போன்ற காலநிலை ஏற்படும். இந்த மலைகளின் அடிவாரம் மற்றும் இவற்றில் இருந்து உற்பத்தியாகும் நதிகளின் படுகைகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment