உலக அமைதிக்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசு விழா முடிந்ததும் பரிசு பெற்ற 13 பேருக்கும் நோர்வே நாட்டு மன்னர் ஹரால்டு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அவசர அலுவல்கள் இருப்பதாக கூறி, இந்த விருந்தில் ஒபாமா பங்கேற்கவில்லை. இது நோர்வே நாட்டு மன்னரை அவமதிப்பதாக உள்ளது என அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன. ஆனால், ஒபாமாவின் பணிச்சுமையை தாங்கள் புரிந்து கொண்டிருப்பதாக நோபல் பரிசு கமிட்டி கூறியுள்ளது.
No comments:
Post a Comment