Monday, December 21, 2009

சரத் பொன்சேகா தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறுவார்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவானால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமமந்திரியாக செயற்பட எண்ணம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவானால் மூன்று விடயங்களை நிறைவேற்றுவது குறித்து முன்னுரிமை கொடுக்கப்படும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, நாடாளுமன்ற அரசாங்க முறை, மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமமந்திரிமுறை என்பன அதில் உள்ளடங்கும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ள நிலையில் சரத் பொன்சேகாவை தேர்தலில் நிறுத்தியமை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, தாம் கட்சிக்கு அப்பால் சரத் பொன்சேகாவை நிறுத்தவில்லை. தாம் சரத் பொன்சேகாவுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டார். சரத் பொன்சேகா தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறுவார் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment