Friday, December 11, 2009

மீனவரை அடித்துக் கொன்ற கடற்படைச் சிப்பாய் நீதிமன்றில் இனம் காட்டப்பட்டார்.

திருமலை மீன்பிடி துறைமுகத்தில் தொழில் புரிந்த இளைஞன் ஒருவர் அடித்து கொல்லப்பட்டமை தொடர்பாக கடற்படையைச் சேர்ந்த மூவர் குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

குப்பிட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பு நேற்று திருமலை நீதிமன்றில் இடம்பெற்றது. அவ் அணிவகுப்பில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள கடற்படைச் சிப்பாய்களில் மூவரில் ஒருவர் அடையாளம் காட்டப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறிப்பிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் பணிபுரியும் மூவர் படகுகளுக்கு பனிக்கட்டிகளை அடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் அங்கு மதுபோதையில் சென்ற கடற்படையினர் அவர்களிடம் மீன் தருமாறு கோரியுள்ளனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று படகொன்றினுள் தொழில் செய்து கொண்டிருந்த மரணமான நபர் தானிருந்த படகிலிருந்து வெளியே வருவதற்கு உதவியாக கடற்படையினரில் ஒருவரின் தோழில் கைபோட்டுள்ளார். அத்தொழிலாளி தோழில் கைபோட்டதை தரக்குறைவாக கருதிய படையினர் அவரை தாறுமாறாக தாக்கியதுடன் அவருடன் இருந்த இருவரையும் தாக்கிவிட்டு சென்றுள்ளனர். தாக்கப்பட்டவருக்கு எவ்வித வெளிக்காயங்களும் காணப்படாததால் அவர்கள் தமது தொழிலை தொடர்ந்துள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர் அவ்விடத்திலேயே மரணித்துள்ளார்.

உள்காயங்களால் ஏற்பட்ட உள்ளக இரத்தப்பெருக்கு காரணமாக மரணம் நேர்ந்துள்ளதாக மரண வைத்திய அறிக்கை தெரிவிக்கின்றது. இறந்தவருடன் கூட இருந்து அடிவாங்கியவர்களே கடற்படையினரை அடையாளம் காட்டியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com