அரச ஊடகங்கள் பாரபட்சமாக நடந்தால் நடவடிக்கை எடுப்பேன் : தேர்தல்கள் ஆணையாளர்.
U.N, E.U மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரச ஊடகங்கள் பாரபட்சமாக நடந்து கொண்டால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் ஆதாரங்கள் பலவற்றுடன் தேர்தல் திணைக்களத்திற்கு சென்று அரச ஊடகங்கள் பக்கசார்பாக நடந்து கொள்வதாகவும், அரசிற்கு ஆதரவான பிரச்சாரங்களையே மேற்கொள்வதாகவும், அவற்றை நிறுத்தும் பொருட்டு செயற்திட்டமொன்றை வடிவமைக்குமாறும் வேண்டியபோதே அவர் இதை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தனியார் ஊடகங்கள் தொடர்பாக தெரிவிக்கையில், தனியார் ஊடகங்கைளை கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரங்கள் அரசியல் யாப்பின் 17ம் திருத்தச்சட்டத்தில் உள்ளதாகவும் ஆனால் அது தற்போதைக்கு சாத்யமில்லை எனவும் நீதியானதும்; நேர்மையானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென நான்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அழைக்கப்படவுள்ள ஸ்தாபனங்களில் ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், ஆசியா தேர்தல்கள் ஆணையகம் என்பனவும் அடங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment