கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் ஒன்று தொடர்பாக பல ஊடகங்களும் குரல் எழுப்பியிருந்தது. ஆனால் அங்கே கடத்தப்பட்டிருந்த நபர் இலங்கையிலே இயங்கிக்கொண்டிருந்த மிக முக்கியமான அதி பயங்கர மாபியா என்பது ஊடகங்கள் அறிந்திருக்கவில்லை.
இலங்கையிலே புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டகையுடன் நாட்டில் இயங்கிக்கொண்டிருந்த பாதாள உலக குழுக்கள் யாவும் விசேட அதிரடிப்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மிகவும் திட்டமிட்டமுறையில் ஒழித்துக்கட்டப்பட்டுவந்தது. அதன் அடிப்படையில் அரங்கேறிய நிகழ்வொன்று கடந்த புதன் கிழமை பிசகிப்போனது எனலாம்.
கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுயில் உள்ள வர்த்தக சமூதாதயத்தை ஆட்டிப்படைத்துவந்த மாபியாக் கும்பல் ஒன்றின் தலைவனை இலக்குவைத்த விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினர் கடந்த இரண்டரை மாதங்கள் பின்தொடர்ந்து அவரை தமது வைலயில் சிக்கவைத்துக்கொண்டனர். தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரம் ஒன்றுக்கான பேரம்பேசலில் ஈடுபட்டனர். நாள் நிச்சயமானது. நிச்சயித்தபடி குறிப்பிட்ட நேரத்திற்கு , குறிப்பிட்ட இடத்திற்கு சென்றிறங்கியபோது குழுவின் தலைவன் உட்பட அங்கு சென்றிருந்த நால்வரையும் அள்ளிவாகனம் ஒன்றினுள் போட்டுக்கொண்ட கொமாண்டோக்களின் வாகனம் சென்ற இடம் தெரியாமல் மறைந்து விட்டது.
மாபியா கும்பலின் தலைவனுடன் வந்திருந்த மூவரில் ஒருவர் தான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் என தனது அடையாளத்தை தெரியப்படுத்துகின்றார். ஆனாலும் அவருடைய அடையாளம் அங்கு செல்லுபடியற்றதாகபோகின்றது. காரியத்தை நிறைவேற்றவிருந்த விசேட அதிரடிப்படைக் குழுவினருக்கு அதிர்ச்சி. குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி குற்றவாளிக்கு உடந்தையாக செயற்பட்டுவந்திருக்கின்றாரா என்ற விசாரணை துரிதவேகத்தில் இடம்பெறுகின்றது. இல்லை என்ற பதில் சகல தரப்பிடமும் இருந்து வருகின்றது. திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் நால்வரும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பாரமளிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி குற்றவாளிக்கு உதவிகள் புரிபவராக இருந்திருந்தால் நால்வரதும் கதை வேறாக முடிந்திருக்கும் என பலரும் பேசுகின்றனர்.
குறிப்பிட்ட மாபியாக்குழுத் தலைவன் இவ்வாறு பல பொலிஸ் அதிகாரிகளை தனது பணப்பலத்தின் மூலம் விலைக்கு வாங்கி வைத்துள்ளார். அவர்களில் பலருக்கு இவரை ஏலத்தில் பொருட்களை வாங்கும் நியாயமான வர்த்தகராகவே தெரியும். ஆனால் அவன் ஏலத்திற்கு வரும் ஏனைய வர்த்தகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவர்களை பணிய வைத்துள்ளதுடன், தான் நினைக்கும் விலைக்கு பொருட்களை கொள்வனது செய்து அதே நேரத்தில் அப்பொருட்களை கொள்ளை லாபத்துடன் விற்பதுவே இவனது வியாபாரமாகும். எவராவது தான் கேட்கும் விலைக்கு மேலாக ஏலத்தில் விலைகேட்பார்களாக இருந்தால் அவர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இவ்வாறான சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இவர் ஆபத்தானது என தான் கருதும் பயணங்களுக்குச் செல்லும்போது தனக்கு பழக்கமான பொலிஸ் அதிகாரிகள் யாரையாவது ஒருவரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளான். ஆனால் இவனது உள்நோக்கம் தெரியாத குறிப்பட்ட அதிகாரி சிக்கலில் சிக்கியுள்ளார்.
எது எவ்வாறாக இருந்தாலும் கொழும்பில் உள்ள பொலிஸ் அதிகாரிகளில் பல உயரதிகாரிகள் இவனிடம் கப்பம் பெறுபவர்களாகவே இருந்து வருகின்றமை தெரிவந்துள்ளது.
No comments:
Post a Comment