ரிஎம்விபி யினர் ஜனாதிபதியை சந்திக்கின்றனர். கட்சியினுள் குழப்பம்?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் குழுவொன்று இவ்வாரம் ஜனாதிபதியைச் சந்தித்து பேசவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக செயலாளரினாலும், தலைவரினாலும் மாறுபட்ட கருத்துக்கள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி மஹிந்தவிற்கு ஆதரவு பிரச்சாரங்களை மேற்கொள்ளாது எனவும், அதற்கு பிரதான காரணமாக கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் மாகாண ஆளுனரின் தலையீட்டையும் தெரிவித்திருந்தார்.
அதே நேரம் வேறு சில ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள, கட்சியின் தலைவர் பிள்ளையான் தாம் மஹிந்தவையே ஆதரிக்கவுள்ளதாகவும், தேர்தல் விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை கட்சியின் தலைமைக்கு மாத்திரமே உண்டு எனவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
இந்நிலைமைகள் கட்சியினுள் முரண்பாடுகள் காணப்படுவதை உணர்த்துகின்றது. இந்நிலையலேயே ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.
0 comments :
Post a Comment