Wednesday, December 9, 2009

காதலன் உட்பட ஆபாச பட மோசடியில் ஈடுபட்ட 7 கைது.

ஹகதோட்ட பிரதேசத்தில் உள்ள யுவதி ஒருவர் தனது காதலனுடன் சற்று ஆபாசமாக நின்ற காட்சியொன்றை சீடிக்களில் பதிவு செய்து விற்பனை செய்த 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 16 வயது யுவதி ஒருவர் தனது காதலனுடன் நடந்து கொண்ட சில காட்சிகளை கையடக்க தொலைபேசி மூலம் பதிவு செய்த காதலனே அவற்றை இக்குழவிற்கு விற்பனை செய்துள்ளாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட காட்சிகள் சீடீ க்களில் வீடியோவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் இணையத்தளங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட யுவதி சம்பவம் தொடர்பாக பிரதேச பொலிஸாருக்கு முறையிட்டதைத் தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வரை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com