Thursday, December 31, 2009

இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்கும்படி 4 நாடுகள் அறிவுறுத்தல்

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய 4 நாடுகள் இந்தியாவிலுள்ள தங்கள் நாட்டவருக்கு தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியா வரும் வெளிநாட்டவர் ஒரு முறை வந்து சென்ற பின் மீண்டும் இரண்டு மாத இடைவெளியில் தான் திரும்ப வர வேண்டும் என்ற இந்தியாவின் புதிய விசா நிபந்தனைகளை ஏற்கனவே இந்நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்தியாவின் இந்த புதிய விசா நிபந்தனைகள் இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளிடையே குழப்பத்தை ஏற்பத்தியுள்ளதாக அந்நாட்டு இணைய தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும், சமீபத்தில் மும்பை, அகமதாபாத், பெங்களூர் நகரங்களில் மக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்கள் தான் குறி வைத்து தாக்கப்பட்டன எனவும், ஆகவே அடுத்த கட்டத் தாக்குதல்கள் வெளி நாட்டவர் மீது இருக்கலாமெனவும் அந்த இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட இந்தியா தீவிரவாதத்திற்கு இலக்காகியிருப்பதாகவும் எனவே பாதுகாப்பாக இருக்கும்படியும் தங்கள் நாட்டவர்களை எச்சரித்துள்ளன. இந்தியாவில், குறிப்பாக அமெரிக்கர்கள் மற்றும் மேலை நாட்டினரைக் குறி வைத்து தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என தங்களுக்கு தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு விளக்கமளித்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம், இது ஒரு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்று தெரிவித்துள்ளது. இந்தியா பயங்கரவத்திற்கு இலக்கானது என்பதை போல் பரப்பப்பட்டு வரும் இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் தாம் அதை நம்பப்போவதில்லை எனவும் இந்தியாவில் வெளி நாட்டினர் மிகவும் பாதுகாப்பாகவே உள்ளனர் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.


No comments:

Post a Comment