பூநகரி, துணுக்காய் மற்றும் மல்லாவி பகுதிகளில் இதுவரை 28 ஆயிரத்து 500 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
யாழ். செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஆளுநர் மேற்படித் தகவலைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
கிளிநொச்சி நகரில் கண்ணிவெடி அபாயம் உள்ளதால் அங்கு மக்களை குடியமர்த்தவோ நடமாட விடவோ அனுமதியளிக்க முடியாது. ஆனால் கிளிநொச்சி நகரிலிருந்து 4 கி. மீற்றர் தூரத்திலுள்ள 9 கிராமங்களில் மக்களை மீளக்குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் அரசு 5300 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளது.
முதல் கட்டமாக நேர்ப் திட்டத்தின் மூலம் யுத்தத்தால் வீடுகளை இழந்த வடக்கு மக்களுக்கு 12600 வீடுகளை அமைத்துக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment