இணையத்தளம் ஒன்றிற்கு அரசாங்கம் 25000 USD மாத ஊதியமாக வழங்குகின்றது.
ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் அரச சார்பு இணையத்தளம் ஒன்றிற்கு அரசாங்கம் மாதாந்தம் 25000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக சண்டேலீடர் பத்திரிகை தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை நாட்டின் வீரனாக தெரிவித்திருந்த குறிப்பிட்ட இணையம் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இராணுவப் பெண்சிப்பாய்களுக்கு பிறக்கவுள்ள குழந்தைகள் சிலரது மரபணுக்கள் பரிசோத்திக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதானது ஜெனரல் பொன்சேகாவிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும் ஜெனரல் பொன்சேவிற்கு மாத்திரமல்ல இலங்கை இராணுவத்தின் சகல அதிகரிகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட இணையம் ஜெனரல் பொன்சேகாவின் குடும்ப அங்கத்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கொள்ளவு செய்யப்பட்ட இராணுவ தளபாடங்களுக்கான தரகு கூலியாக அதிக பணத்தை சம்பாதித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
அதே நேரம் இவ்வாறான செய்திகளை ஏசியன் றிபியூண் இணையம் வெளியிட்டதாக ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் அவ்விணையத்திற்கும் குறிப்பிட்ட ஆக்கங்களில் சிலவற்றை எழுதிய கே.ரி. ராஜசிங்கத்திற்கும் எதிராக வழக்கு தொடருமுன்னர் வக்கீல் ஊடாக கடிதமொன்றை எழுதி அனுப்பியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment