எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிறேமஜெயந்தவினால் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர்கள் 22 பேருக்கும் தனித்தனிக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள புலிக் கூட்டமைப்பு என செல்லமாக அழைக்கப்பட்ட கூட்டமைப்பினர் எதிர்வரும் 10 ம் திகதி ஜனாதிபதியை சந்திப்பர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அதிபர் ராஜபட்ச இரு நாட்களுக்கு முன்னர் தனியே சந்தித்துப் பேசியதாகவும், இந்நிலையில் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து எம்.பி.,க்களுக்கும் கடிதம் எழுதப்பட்டிருப்பது அதன் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கருதுவதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment