Thursday, December 31, 2009

2036-ம் ஆண்டு பூமியில் மோதும் ராட்சத விண்கல்: நடுவானில் அழிக்க விஞ்ஞானிகள் ஆய்வு

விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை எப்போதாவது பூமி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியை நோக்கி வேகமாக வரும். ஆனால் வரும் வேகத்தில் அவற்றில் தீப் பிடித்து நடுவானிலேயே சாம்பலாகி விடும். இப்போது மிகப் பெரிய ராட்சத கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது விண்ணில் தீப்பிடித்தாலும் கூட கல் பெரிய அளவில் இருப்பதால் பூமிக்கு பெரும் சேதம் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இந்த கல் 270 மீட்டர் குறுக்களவு உள்ளது. 2029-ம் ஆண்டு இந்த கல் பூமிக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் வரும். அடுத்த 7 ஆண்டில் மேலும் பூமியை நோக்கி நகர்ந்து 2036-ம் ஆண்டு பூமி சுற்றுப் பாதைக்குள் நுழையும். உடனே புவி ஈர்ப்பால் ஈர்க்கப்பட்டு பூமியில் விழும். அப்போது பூமியில் 29,450 கிலோ மீட்டர் அளவில் அதன் பாதிப்பு ஏற்படும். பல லட்சம் மக்கள் உயிரிழக்கவும் நேரிடும். பூகம்பம், சுனாமி, போன்ற இயற்கை பேரழிவு நிகழலாம். எனவே இதை நடுவானிலேயே அழிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஆய்வில் ரஷிய விஞ்ஞானிகள் ஈடுபடுகிறார்கள். அவர்களுடன் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய விஞ்ஞானிகளும் ஆய்வு செய்கின்றனர். இது தொடர்பான விஞ்ஞானிகள் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று ரஷிய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் அனாடலி பெரிமினோங் தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com