இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு 150 கோடியாக இருக்கும் என தேர்தல் திணைக்களத்தின் பிரதான கணக்காளர் ஈ.ஏ. வீரசேன தெரிவித்துள்ளார். அரசு இவ்வாறானதோர் தேர்தலுக்கு செல்லும் என தேர்தல் திணைக்களம் எதிர்பார்த்திருக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் ஒர் மதிப்பீட்டின் அடிப்பழயிலேயே இத்தொகை அமைந்துள்ளதாகவும் அது பொது தேர்தல் செலவினங்களிலும் பார்க்க 30 கோடி குறைவானது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு 180 கோடி செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஒவ்வொரு கட்சிகளிடமும் தமது தேர்தல் பிரச்சாரங்களுக்கு எவ்வளவு செலவாகும், அப்பணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள் என வினவப்பட்டபோது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக கருத்து தெரிவித்த ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தேர்தல் பிரச்சாரங்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை தற்போது கூறமுடியாது எனவும், எவ்வாறாயினும் அச்செலவுகள் கட்சியின் ஆதரவாளர்களாலேயே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளதுடன், முன்னணியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பா.உ பசில் ராஜபக்ஸ அவர்களே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் நிர்வாகக் குழுத்தலைவர் தயா கமகே அவர்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கான விளம்பரங்களை கட்சியின் தலைமை பீடம் ஏற்றுக்கொள்ளும் எனவும் மாவட்ட மட்டத்திலான பிரச்சாரப்பணிகளுக்கு கட்சியின் மாவட்டத் தலைவர்களே பொறுப்பு எனவும் மாவட்ட மட்டத்தலைவர்களே அவற்றை நிர்வகிப்பர் எனவும் அதுவும் அப்பிரதேசத்தில் உள்ள கட்சியின் ஆதரவாளர்களே பொறுப்பெடுப்பர் எனவும் கூறியுள்ளார்.
ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த, கட்சியின் சேமிப்பில் சிறிய தொகைப்பணமே உள்ளதாகவும் தாம் எந்த சந்தர்ப்பத்திலும் அப்பணத்தை பிரச்சார பணிகளுக்கு பயன்படுத்துவதில்லை எனவும் பிரச்சாரப்பணிகளுக்கு தேவையான பணத்தை கட்சியின் உறுப்பினர்கள் தமது கட்சியின் கொடிகளை விற்று உயவ உழடடநஉவழைn மூலம் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment